AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

  • January 23, 2024 / 11:04 AM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ கடந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

 

‘விடாமுயற்சி’-க்கு பிறகு அஜித்தின் 63-வது படத்தை ‘மார்க் ஆண்டனி’ பட புகழ் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிக்கிறது. இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை தபு கமிட்டாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்ற படத்தில் அஜித் – தபு இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus