கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் யாஷ். இவர் நடித்த ‘கே.ஜி.எஃப்’ முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது. 2022-ஆம் ஆண்டு இப்படத்தின் பார்ட் 2 கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.
இந்த படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது.
மேலும், பாக்ஸ் ஆஃபிஸிலும் ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. சமீபத்தில், யாஷின் 19-வது படத்துக்கு ‘டாக்ஸிக்’ (TOXIC) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, இதன் அறிவிப்பு வீடியோவும் வெளியானது. இந்த அறிவிப்பு வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
இதனை ‘KVN புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இதன் ஷூட்டிங்கை இம்மாதம் ஆரம்பிக்கவுள்ளனர். தற்போது, இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.