சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ராம் சரண். ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் மகனாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார் ராம் சரண். இவர் ஹீரோவாக நடித்த முதல் தெலுங்கு படம் ‘சிறுத்தா’.
இந்த படத்துக்கு பிறகு பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘மகதீரா’ என்ற படத்தில் நடித்தார். இப்படம் தமிழிலும் ‘மாவீரன்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு ராம் சரணுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கு படங்கள் குவிந்தது.
ராம் சரண் நடித்த கடைசி படமான ‘RRR’ கடந்த ஆண்டு (2022) வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்த இந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்தார். இப்போது ராம் சரண் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 27-ஆம் தேதி) நடிகர் ராம் சரணின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, ராம் சரணின் பர்த்டே பார்ட்டியில் ராஜமௌலி, விஜய் தேவரகொண்டா, நாகார்ஜுனா, நாகசைத்தன்யா, காஜல் அகர்வால் என பல பிரபலங்கள் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.
Honouring our Oscar winners in the presence of near and dear on @AlwaysRamCharan ‘s birthday was a true celebration! This feat Telugus achieved for the Indian Cinema shall remain etched in history!! @TheAcademy #OscarsForIndianCinema #Oscars95 #TeluguCinema pic.twitter.com/menKXI5jKh
— Chiranjeevi Konidela (@KChiruTweets) March 28, 2023