சினிமாவில் பாப்புலர் நடன இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிவசங்கர். இவர் தமிழ், தெலுங்கு உட்பட 10 மொழிகளில் நடன இயக்குநராக 800 படங்களுக்கு மேல் பணியாற்றியிருக்கிறார். ‘பூவே உனக்காக, வரலாறு, அருந்ததி, திருடா திருடி, பாகுபலி 1, விஷ்வ துளசி, உளியின் ஓசை’ போன்ற படங்கள் இவர் பணியாற்றியதில் மிக முக்கியமான படங்களாக அமைந்தது.
நடன இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் ‘பிஸ்கோத், தில்லுக்கு துட்டு 2, சர்கார், கஜினிகாந்த், தானா சேர்ந்த கூட்டம், சிவலிங்கா, அரண்மனை, தில்லு முல்லு, பரதேசி, வரலாறு’ போன்ற பல படங்களில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார் சிவசங்கர்.
சமீபத்தில், நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.