பிரபல காமெடி நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

  • February 19, 2023 / 12:53 PM IST

சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. தமிழ் சினிமாவில் பாப்புலர் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் மயில்சாமி.

இவர் ‘அபூர்வ சகோதரர்கள், தில், தவசி, தூள், ஜெயம், கில்லி, தேவதையை கண்டேன், லண்டன், தலைநகரம், திருவிளையாடல் ஆரம்பம், காஞ்சனா, ஒஸ்தி, வீரம், காக்கி சட்டை, ரெமோ, 2.0, LKG’ போன்ற பல படங்களில் காமெடியனாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

தற்போது, நடிகர் மயில்சாமி (வயது 57) இன்று அதிகாலை மாரடைப்பால் இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus