சினிமாவில் பாப்புலர் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் பட்டுக்கோட்டை டி.சிவநாராயண மூர்த்தி. இவர் இதுவரை தமிழில் 300 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
தற்போது, திடீர் உடல்நலக்குறைவால் நேற்று (டிசம்பர் 7-ஆம் தேதி) இரவு 8:30 மணியளவில் டி.சிவநாராயண மூர்த்தி (வயது 66) இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டி.சிவநாராயண மூர்த்தியின் மனைவி பெயர் புஷ்பவள்ளி. இவர்களுக்கு இரண்டு ஆண் (லோகேஷ், ராம்குமார்), மற்றும் 1 பெண் பிள்ளைகள் உள்ளனர். டி.சிவநாராயண மூர்த்தியின் இறுதிச்சடங்கு இன்று (டிசம்பர் 8-ஆம் தேதி) மதியம் 2 மணிக்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் நடைபெறுமாம்.