பிப்ரவரியில் ஆரம்பமாகும் சிவகார்த்திகேயனின் ‘டான்’… முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல இயக்குநர்!
January 30, 2021 / 05:33 PM IST
|Follow Us
டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அறிவிப்பு வந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தான் இயக்க உள்ளாராம். இவர் டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.
‘டான்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் பாப்புலர் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.