தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், கதாசிரியராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் ஈ.ராம்தாஸ். இவர் ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜாதான், இராவணன், வாழ்க ஜனநாயகம்’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.
‘பொன் விலங்கு, அடிமைச்சங்கிலி, மக்கள் ஆட்சி, இனி எல்லாம் சுகமே, கண்ணாத்தாள், எதிரும் புதிரும், சங்கமம், கண்ட நாள் முதல்’ போன்ற பல படங்களுக்கு ஈ.ராம்தாஸ் கதாசிரியராக பணியாற்றியிருக்கிறார்.
இவர் ‘வசூல் ராஜா MBBS, யுத்தம் செய், குக்கூ, காக்கி சட்டை, விசாரணை, ஒரு நாள் கூத்து, தர்மதுரை, விக்ரம் வேதா, அறம், மாரி 2’ போன்ற பல படங்களில் முக்கிய ரோலில் வலம் வந்திருக்கிறார். தற்போது, இயக்குநரும், நடிகருமான ஈ.ராம்தாஸ் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.