தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘ராயன்’, ‘தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலா படம் என 3 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
சமீபத்தில், தனுஷ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். இது பிரபல இசையமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜாவின் பயோபிக்காம்.
இதனை ‘கனெக்ட் மீடியா – மெர்க்குரி க்ரூப்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. தற்போது, இந்த படத்தை ‘ராக்கி, கேப்டன் மில்லர்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். ஷூட்டிங்கை இந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் ஆரம்பிக்கவுள்ளனர். படத்தை அடுத்த ஆண்டு (2025) ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.