‘விஜய் 68’-ஐ இயக்கும் வெங்கட் பிரபு… இதில் வில்லன் ரோலில் நடிக்கப்போவது இந்த இயக்குநரா?

  • May 22, 2023 / 08:45 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.

‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறதாம். தற்போது, இதில் விஜய்-க்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus