அருண் விஜய் படத்திலிருந்து விலகிய பிரகாஷ் ராஜ்… அந்த ரோலில் நடிக்க ஒப்பந்தமான பிரபல இயக்குநர்!

  • August 27, 2021 / 01:11 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் அருண் விஜய். இப்போது, அருண் விஜய் நடிப்பில் ‘சினம், வா டீல், அக்னிச் சிறகுகள், பார்டர்’ மற்றும் இயக்குநர் ஹரி படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஹரி இயக்கும் படத்துக்கான ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.

இப்படத்தினை ‘டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அருண் விஜய்-க்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார். மேலும், முக்கிய ரோல்களில் யோகி பாபு, ராமச்சந்திர ராஜு, ராதிகா, ஜெயபாலன், தலைவாசல் விஜய், அம்மு அபிராமி, ராஜேஷ், இமான் அண்ணாச்சி நடித்து வருகின்றனர்.

இப்படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். முதலில் இந்தப் படத்தில் அருண் விஜய்-க்கு அண்ணனாக நடிக்க பிரகாஷ் ராஜ் ஒப்பந்தமானார். தற்போது, சில காரணங்களால் பிரகாஷ் ராஜ் இப்படத்திலிருந்து விலகி விட்டதாகவும், அவருக்கு பதிலாக இயக்குநர் சமுத்திரக்கனி அந்த ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus