‘கொரோனா’ பாதிப்பு… ‘ரெட்டச்சுழி’ பட இயக்குநர் தாமிரா காலமானார்!

  • April 27, 2021 / 11:56 AM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் தாமிரா. இவர் இயக்கிய முதல் படத்தில் இரண்டு பிரபல இயக்குநர்களான ‘இயக்குநர் சிகரம்’ பாலச்சந்தரும், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் இணைந்து நடித்தார்கள். அது தான் ‘ரெட்டச்சுழி’. இதில் மிக முக்கிய ரோல்களில் ‘பிக் பாஸ் 4’ வின்னர் ஆரி, அஞ்சலி நடித்திருந்தனர்.

‘ரெட்டச்சுழி’ படத்துக்கு பிறகு தாமிரா இயக்கிய படம் ‘ஆண் தேவதை’. இந்த படத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ் 4’ ரம்யா பாண்டியன் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’-க்காக ‘தி பெர்ஃபெக்ட் ஹஸ்பன்ட்’ என்ற வெப் சீரிஸை இயக்கி வந்தார் தாமிரா.

சமீபத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் தாமிரா, இன்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இயக்குநர் தாமிரா கடைசியாக அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் “இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை. என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன். இனி யாரோடும் பகைமுரண் இல்லை. யாவரும் கேளிர்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus