தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சீனுராமசாமி திடீரென இன்று காலை தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், முதல்வர் அவர்கள் தான் தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும், தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை அதிரடியாக விடுத்திருந்தார்.
பிறகு இதுகுறித்து இவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தான் விஜய்சேதுபதியை 800 திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறியிருந்ததால்தான் தனக்கு இந்த மிரட்டல்கள் வருவதாகவும், இரவு பகல் பாராமல் ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்க்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி தனக்கு கொலை மிரட்டல் கூட வந்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். தான் விஜய்சேதுபதியின் நலனை கருதி மட்டுமே அந்த அறிவுரையை கூறியதாகவும் அதை புரிந்து கொள்ளாமல் பலர் மிரட்டல் விடுப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும் அவர் போலீசில் இது குறித்து புகாரும் அளித்துள்ளார் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
https://twitter.com/seenuramasamy/status/1321304921929637892?s=19