Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’… ஏலியன் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்த பிரபல நடிகர் யார் தெரியுமா?
December 13, 2023 / 06:34 PM IST
|Follow Us
டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். இப்போது இவர் நடிப்பில் ‘அயலான்’, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் சயின்ஸ்-ஃபிக்ஷன் படமான ‘அயலான்’-யின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குநர் ரவிக்குமார் இயக்க, ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
மேலும், முக்கிய ரோல்களில் இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இதன் GLIMPSE மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தை அடுத்த ஆண்டு (2024) பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தில் வலம் வரும் ஏலியன் கேரக்டருக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Thank you Actor #Siddharth for being a part of Ayalaan and giving life to our cosmic Neighbour 👽
Every bit of enthusiasm, commitment and hardwork you've given has made our Ayalaan more realistic and lovely. And we hope the audience will love your work as much as we did✨… pic.twitter.com/xbLA07BJhA