தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ‘லால் சலாம்’, ‘வேட்டையன்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் ரஜினியின் கேரியரில் 171-வது படமாம். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் மிக முக்கிய ரோலில் நடிக்க விஜய் சேதுபதியை லோகேஷ் அணுகியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.