தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படம் 2006-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக நரேன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பாவனா நடித்திருந்தார். இப்படத்தினை மிஷ்கின் இயக்கியிருந்தார். இது தான் மிஷ்கின் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படமாம்.
‘சித்திரம் பேசுதடி’ படத்துக்கு பிறகு ‘அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ’ போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இதுமட்டுமின்றி, ‘நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களை இயக்கியதுடன், நடிக்கவும் செய்துள்ளார் மிஷ்கின். இவர் மற்ற இயக்குநர்களின் சில படங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது, இயக்குநர் மிஷ்கின் ட்விட்டரில் “நண்பர்களே, என்னுடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வருகின்ற செப்டம்பர் 20-ம் தேதி 00:00 AM மணிக்கு அறிவிக்கிறேன். அன்பு முத்தங்களுடன், மிஷ்கின்” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக கோலிவுட் வட்டாரத்தில் விசாரிக்கையில் மிஷ்கின் இயக்க உள்ள புதிய படத்தில் ஹீரோயினாக ஆண்ட்ரியா நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது 2014-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘பிசாசு’ படத்தின் பார்ட் 2-வாம். இந்த படத்தை ‘ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.
நண்பர்களே,
என்னுடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வருகின்ற செப்டம்பர் 20-ம் தேதி 00:00 AM மணிக்கு அறிவிக்கிறேன்.
அன்பு முத்தங்களுடன்,
மிஷ்கின்— Mysskin (@DirectorMysskin) September 17, 2020