பிரபல மலையாள குணச்சித்திர நடிகரான அனில் முரளி கொச்சியில் இன்று காலமானார். இவருக்கு வயது 56. கிட்னி சம்பந்தப்பட்ட நோயால் இவர் அவதிப்பட்டு வந்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
திடீரென இவர் உயிரிழந்ததையடுத்து மலையாள திரையுலகினர் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர். தற்போது நடிகர் மோகன் லால், பிரித்திவிராஜ், நிவின் பாலி, டொவினோ தாமஸ், உன்னி முகுந்தன் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.
திருவனந்தபுரத்தில் பிறந்த அனில் முரளி மலையாள திரையுலகில் வில்லன் கதாபாத்திரத்தில் அதிகமாக நடித்து வந்தார். இவர் தமிழ் திரையுலகில் நிமிர்ந்து நில், தனி ஒருவன், கொடி, நாடோடிகள் 2 ,வால்டர் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதிகமாக மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் அனில் முரளி தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் அதிகமாக நடித்துள்ளார். திடீரென்று இவர் காலமானதால் திரையுலகினர் சோகத்தில் ஆழ்ந்து, தற்போது தங்களது இரங்கலை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CDQg-r-JlMv/?igshid=l7jt2m10ygzn
https://www.instagram.com/p/CDQhC8bDldu/?igshid=2knbo5zsoht9
https://twitter.com/PrithviOfficial/status/1288737795838808064?s=19