மலையாள திரையுலகில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் இன்னொசென்ட். இவர் 1972-ஆம் ஆண்டு சினிமாவில் என்ட்ரியானார்.
இன்னொசென்ட் 750 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவர் தமிழில் ‘லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது’ ஆகிய 2 படங்களில் நடித்திருந்தார். மலையாளம் மற்றும் தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் இன்னொசென்ட் (வயது 75), நேற்று (மார்ச் 26-ஆம் தேதி) சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.