தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு திருமணம் ! மணப்பெண் யார் தெரியுமா ?

கோலிவுட் சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர். இவர் தயாரிப்பில் ‘நளனும் தமயந்தியும்’ ’சுட்டகதை’ ’நட்புனா என்னனு தெரியுமா’ ’முருங்கக்காய் சிப்ஸ்’ உள்பட பல படங்கள் வெளியாகி இருக்கிறது .

இந்த நிலையில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனர் ரவீந்தர் சந்திரசேகர் படத்தயாரிப்பு மட்டுமின்றி சில யூடியூப் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பேசி இருந்தார் மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை மையமாக வைத்து ஒரு நிகழ்ச்சியிலும் இவர் பங்காற்றினார் . இந்நிலையில் லிப்ரா புரொடக்ஷன் நிறுவனர் ரவீந்தர் சந்திரசேகர் நடிகை மஹாலட்சுமி அவர்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 


இவர்களது திருமணம் இன்று நடந்த நிலையில் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

 

 

Share.