‘பிக் பாஸ் 4’-யில் நானா?… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல பாடகர்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கவுள்ளது . சமீபத்தில், விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான ஆறு ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டது.

நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இடம்பெற்றிருக்கும் இந்த ஆறு ப்ரோமோ வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த ப்ரோமோ வீடியோக்களில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணமுள்ளது கோலிவுட் வட்டாரம். கடந்த சில நாட்களாக பிரபல பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான அஜீஸ் ‘பிக் பாஸ் 4’-யில் கலந்து கொள்ளப்போகிறார் என்று தண்டோரா போடப்பட்டது. இது தொடர்பாக அஜீஸ் ட்விட்டரில் “இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை” என்று கூறியுள்ளார். வெகு விரைவில் இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் அந்த பிரபலங்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.