ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிப்பதற்காக பிரபல கிரிக்கெட் வீரர் விராத் கோலி மற்றும் தமன்னா பாட்டியா ஆகியோரின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
MPL என்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா பாட்டியா மற்றும் விராட் கோலி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் இவர்கள் இருவர் மீதும் தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டு இந்த மனு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இது குறித்த பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, இதுபோன்ற ஆன்லைன் கேமிங் தளங்கள் மூடப்பட வேண்டும். மக்கள் தங்களது கடின உழைப்பால் கிடைத்த பணத்தையும் நேரத்தையும் இதுபோன்ற கேமிங் ஆப்களில் செலவிட்டு மேலும் வட்டிக்கு பணம் வாங்கி இந்த சூதாட்டத்தில் ஈடுபடும் அளவிற்கு அடிமையாகி உள்ளார்கள். இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
சிலர் தங்களுடைய வாழ்க்கையை கூட முடித்துக் கொள்கிறார்கள். இது போன்ற விளையாட்டுகள் ப்ளூவேல் என்று உயிரை கொள்ளும் ஒரு விளையாட்டு வந்தது அதை விட கொடியது. அதனால் இந்த விளையாட்டுகளை ஊக்குவிக்கும் பிராண்ட் அம்பாசிடர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அவர்களை கைது செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில்தான் நடிகர் ஷ்யாம் தனது அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் விளையாடுவதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான “ஆக்ஷன்” என்ற தமிழ் படத்தில் நடித்திருந்த நடிகை தமன்னா. தற்போது மூன்று தெலுங்கு படங்களிலும் ஒரு இந்திப் படத்திலும் நடித்து வருகிறார். இவர் தற்போது கைது செய்யப்படலாம் என்பது பரபரப்பாக பேசப்படுகிறது.