இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு எடுத்த ஸ்பெஷல் போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோக்களை பல நடிகைகள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் :
பிரபல நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், ‘கீதாஞ்சலி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். தமிழில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமான படம் ‘இது என்ன மாயம்’ தான் என்றாலும், அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய இரண்டு படங்களும் தான்.
அதன் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், பெண்குயின், அண்ணாத்த, சாணிக் காயிதம்’ என படங்கள் குவிந்தது.
கீர்த்தி சுரேஷ் நேரடி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா’ என 3 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
கல்யாணி ப்ரியதர்ஷன் :
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கல்யாணி ப்ரியதர்ஷன். பாப்புலர் இயக்குநர் ப்ரியதர்ஷன், நடிகை லிஸ்சி தம்பதியினரின் மகளான கல்யாணி, அறிமுகமான முதல் தெலுங்கு படமே நாகார்ஜுனாவின் மகன் அகிலுடன் தான். அது தான் ‘ஹலோ’.
அதன் பிறகு நடிகை கல்யாணிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கில் ‘சித்ரலஹரி, ரணரங்கம்’ என படங்கள் குவிந்தது. பின், தமிழில் அறிமுகமான கல்யாணிக்கு அமைந்த முதல் படமே டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயனுடன் தான். அது தான் ‘ஹீரோ’.
‘ஹீரோ’ படத்துக்கு பிறகு ஆந்தாலஜி படமான ‘புத்தம் புதுக் காலை’யிலும், சிலம்பரசனின் ‘மாநாடு’ படத்திலும் நடித்திருந்தார் கல்யாணி. ‘மாநாடு’ படத்தில் கல்யாணியின் நடிப்பு ரசிகர்களை அதிக லைக்ஸ் போட வைத்தது.
அமலா பால் :
சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இவர் நடிப்பில் ‘கடாவர்’ (தமிழ்), ‘ஆடு ஜீவிதம்’ (மலையாளம்), ‘அதோ அந்த பறவை போல’ (தமிழ்) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘கடாவர்’ என்ற படம் கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம் பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸானது. இதனை இயக்குநர் அனூப்.எஸ்.பணிக்கர் இயக்கியிருந்தார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், அதுல்யா ரவி, ரித்விகா, வேலு பிரபாகரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ப்ரியாமணி :
சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியாமணி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கத்தில் தான். அது தான் ‘கண்களால் கைது செய்’. இந்த படத்துக்கு பிறகு நடிகை ப்ரியாமணிக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அது ஒரு கனாக்காலம், மது, பருத்திவீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா, கஸ்டடி’ என படங்கள் குவிந்தது. ப்ரியாமணி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
2017-ஆம் ஆண்டு முஸ்தஃபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ப்ரியாமணி. இப்போது ப்ரியாமணி நடிப்பில் ‘மைதான், ஜவான், கொட்டேஷன் கேங்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
அனுபமா பரமேஸ்வரன் :
சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவருக்கு அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் மலையாள படமான ‘ப்ரேமம்’. இந்த படத்தில் ‘மேரி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். அதன் பிறகு அனுபமா பரமேஸ்வரனுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழில் ‘கொடி, தள்ளிப் போகாதே’, தெலுங்கில் ‘அ ஆ, ப்ரேமம், சதமானம் பவதி, கிருஷ்ணார்ஜுனா யுத்தம், தேஜ் ஐ லவ் யூ, ஹலோ குரு ப்ரேம கோஷமே, ராக்ஷஷுடு’, மலையாளத்தில் ‘ஜோமெண்டே சுவிசேஷங்கள், மணியாரயிலே அசோகன்’, கன்னடத்தில் ‘நடசார்வாப்ஹவுமா’ என படங்கள் குவிந்தது.
ஷிவானி நாராயணன் :
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3 மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘ஜீ தமிழ்’ சேனலில் ஒளிபரப்பான ‘இரட்டை ரோஜா’ சீரியல்களிலும் சூப்பராக நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வந்ததால் ஷிவானிக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவருக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ சீசன் 4 என்ட்ரி.
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.
கடந்த ஆண்டு (2022) வெளியான கமல் ஹாசனின் ‘விக்ரம்’, விஜய் சேதுபதியின் ‘DSP’, வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, இந்த ஆண்டு (2023) வெளியான வெற்றியின் ‘பம்பர்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் ஷிவானி.
தர்ஷா குப்தா :
சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் தான் ஃபேமஸானார். இதனைத் தொடர்ந்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா.
இப்படம் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை ‘திரௌபதி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மோகன்.ஜி இயக்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தில் நடித்தார் தர்ஷா குப்தா. இப்போது இவர் நடிப்பில் ‘மெடிக்கல் மிராக்கல்’ என்ற படம் உருவாகி வருகிறது. இதில் ஹீரோவாக யோகி பாபு நடிக்கிறார்.
அனிகா சுரேந்திரன் :
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இவர் ‘என்னை அறிந்தால், மிருதன், விஸ்வாசம், மாமனிதன்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
அனிகா சுரேந்திரன் இன்ஸ்டாகிராமில் போடும் போட்டோஷூட் ஸ்டில்ஸுக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருந்த இவர் ‘புட்ட பொம்மா’ என்ற தெலுங்கு படத்தின் மூலமாக ஹீரோயினாக அவதாரம் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ‘ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்திலும் ஹீரோயினாக நடித்தார். இதில் ஹீரோவாக மெல்வின்.ஜி.பாபு நடிக்க, இந்த படத்தை ஆல்ஃப்ரெட்.டி.சாமுவேல் இயக்கியிருந்தார்.
கௌரி கிஷன் :
சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கௌரி கிஷன். தமிழ் மொழியில் இவருக்கு அமைந்த முதல் படத்துக்கே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து சூப்பர் ஹிட்டானது. அது தான் ’96’. இந்த படத்தில் சிறு வயது த்ரிஷாவாக வந்து ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தார் கௌரி கிஷன்.
’96’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை கௌரி கிஷனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் மலையாள மொழியில் ‘மர்கம்கலி, அனுகிரகீதன் ஆண்டனி’, தெலுங்கு மொழியில் ‘ஜானு’, தமிழ் மொழியில் ‘மாஸ்டர், கர்ணன்’ என படங்கள் குவிந்தது. இதில் ‘மாஸ்டர்’ மற்றும் ‘கர்ணன்’ ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட்டானது.