பொதுவாக நடிகைகள் தங்களது நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளின் போது எடுக்கப்பட்ட போட்டோஷூட்கள் தான் வைரலாகும்.
முதல் முறையாக ஒரு நடிகை தான் விவாகரத்து பெற்று விட்டேன் என்று குறிப்பிட்டதுடன், அதற்கு ஒரு போட்டோஷூட் எடுத்திருக்கிறார். அவர் வேற யாரும் இல்லை, ‘முள்ளும் மலரும்’ என்ற தமிழ் சீரியலில் நடித்த ஷாலினி தான்.
இவர் ‘சூப்பர் மாம்’ என்ற ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஷாலினி எடுத்த விவாகரத்து போட்டோஷூட் ஸ்டில்ஸ் இப்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.