பிரபல தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி காலமானார்!
September 10, 2020 / 02:41 PM IST
|Follow Us
பிரபல தொலைக்காட்சி நடிகர் மற்றும் காமெடியனான வடிவேலு பாலாஜி மாரடைப்பால் திடீரென இன்று காலமானார். 45 வயதான இவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காமெடி நடிகரான வடிவேலு பாலாஜி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அப்போது மாரடைப்பு காரணமாக பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு மேல் அங்கு சிகிச்சை எடுத்து வந்தும் எந்த பலனும் இன்றி மேலும் பணம் அதிகமாகச் செலவாகி வந்ததால் அங்கிருந்து சில மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு வந்துள்ளார்கள். இருப்பினும் கடைசியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரபல நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நகைச்சுவை நடிகர் வடிவேலு போல நடித்து பிரபலமானவர் வடிவேலு பாலாஜி.
இதை தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்து வந்த இவரை நடிகர் வடிவேலு மிகவும் நன்றாக நடிப்பதாக பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் திடீரென உயிரிழந்ததால் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்கள். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.