தமிழ் திரையுலகில் தனக்கு தானே பட்டம் கொடுத்து, அதன் மூலமே அதிக கவனம் ஈர்த்த நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். 2011-ஆம் ஆண்டு வெளியான ‘லத்திகா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். அதன் பிறகு சந்தானம் தயாரித்து, நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் காமெடியனாக வலம் வந்தார்.
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்துக்கு பிறகு ‘ஒன்பதுல குரு, சும்மா நச்சுன்னு இருக்கு, ஆர்யா சூர்யா, ஐ, சகாப்தம், நாரதன், கவண், சிம்பா’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். கடைசியாக ஜெய்யின் ‘கேப்மாரி’ படத்தில் ‘பவர் பாண்டி துரை’ என்ற ரோலில் நடித்திருந்தார்.
தற்போது, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தான் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ‘முருங்கக்காய்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரில் ‘பவர் ஸ்டார்’ படுக்கையில் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு தயாராக படுத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இப்படத்தை இயக்குநர் ஆர்.எஸ்.மணி இயக்கவுள்ளார். இதில் முக்கிய வேடங்களில் மாரிமுத்து, தமிழ்ச் செல்வி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
All the best our Team https://t.co/eBMLhgeBxy
— IamPowerstar (@PowerstarIam) July 24, 2020