அதிக லைக்ஸ் குவிக்கும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தின் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ பாடல்!

  • May 20, 2023 / 06:21 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ப்ராஜெக்ட் K’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஆதிபுருஷ்’, நடிகர் பிரபாஸின் கேரியரில் 22-வது படமாம். இப்படத்தை ‘தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்’ எனும் ஹிந்தி பட புகழ் இயக்குநர் ஓம் ராவத் இயக்குகிறாராம்.

இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்துள்ளார். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானும், பிரபாஸுக்கு தம்பியாக பாலிவுட் நடிகர் சன்னி சிங்கும் நடித்துள்ளார்கள். இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகுகிறது.

இதனை ‘டி-சீரிஸ்’ மற்றும் ‘ரெட்ரோபைல்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகுகிறது. சமீபத்தில், இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர்.

இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. தற்போது, இப்படத்தில் இடம்பெறும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை வருகிற ஜூன் 16-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus