அடேங்கப்பா… பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • July 26, 2023 / 03:55 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் ‘ஆதிபுருஷ்’, ‘கல்கி 2898 AD’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘ஆதிபுருஷ்’, நடிகர் பிரபாஸின் கேரியரில் 22-வது படமாம். இப்படம் கடந்த ஜூன் 16-ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்’ எனும் ஹிந்தி பட புகழ் இயக்குநர் ஓம் ராவத் இயக்கியிருந்தார். இதில் பிரபாஸிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்திருந்தார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானும், முக்கிய ரோலில் பாலிவுட் நடிகர் சன்னி சிங்கும் நடித்திருந்தார்கள்.

3டி படமான இதனை ‘டி-சீரிஸ்’ மற்றும் ‘ரெட்ரோபைல்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. தற்போது, உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.397.50 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus