பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

  • June 12, 2023 / 11:24 AM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ப்ராஜெக்ட் K’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஆதிபுருஷ்’, நடிகர் பிரபாஸின் கேரியரில் 22-வது படமாம். இப்படத்தை ‘தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்’ எனும் ஹிந்தி பட புகழ் இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்துள்ளார். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானும், முக்கிய ரோலில் பாலிவுட் நடிகர் சன்னி சிங்கும் நடித்துள்ளார்கள்.

3டி படமான இதனை ‘டி-சீரிஸ்’ மற்றும் ‘ரெட்ரோபைல்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. சமீபத்தில், இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இப்பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது.

படத்தை வருகிற ஜூன் 16-ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தை பார்த்த வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் ட்விட்டரில் “படம் நன்றாக இல்லை” என்று குறிப்பிட்டதுடன் 5-க்கு 2 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே கொடுத்துள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus