பிரபாஸ் – அமிதாப் பச்சன் சேர்ந்து நடிக்கும் ‘ப்ராஜெக்ட் K’… வெளியானது மேக்கிங் வீடியோ 1!

  • January 2, 2023 / 10:47 AM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ப்ராஜெக்ட் K’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் நாக் அஷ்வின் இயக்கும் ‘ப்ராஜெக்ட் K’ நடிகர் பிரபாஸின் கேரியரில் 21-வது படமாம். இதனை ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகுகிறது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் டாப் பாலிவுட் நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்துக்கு மிக்கி.ஜே.மேயர் இசையமைக்கிறார், டேனி சஞ்செஸ் லோபெஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் தயாராகும் இப்படத்தின் கதைக்களம் 2050-ஆம் ஆண்டு நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளதாம்.

தற்போது, இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை ரிலீஸ் செய்துள்ளனர். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2023) ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus