Prabhas : பிரபாஸின் புதிய படத்தை இயக்கும் மாருதி… இதன் ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்?

  • December 29, 2023 / 07:58 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் ‘கல்கி 2898 AD’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘சலார்’ முதல் பாகம் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். பிரபாஸுக்கு எதிராக மோதும் வில்லன் ரோலில் ப்ரித்விராஜ் நடித்திருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்குகிறாராம். இதனை ‘பீப்பில் மீடியா பேக்டரி’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதன் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus