முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘கல்கி 2898 AD’, ‘ஸ்பிரிட்’, ‘தி ராஜா சாப்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் நாக் அஷ்வின் இயக்கும் ‘கல்கி 2898 AD’ நடிகர் பிரபாஸின் கேரியரில் 21-வது படமாம். இதனை ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகுகிறது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடிக்கிறார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் டாப் பாலிவுட் நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன், திஷா பதானி, பசுபதி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது.
சமீபத்தில், வெளியிடப்பட்ட GLIMPSE மற்றும் 3 மேக்கிங் வீடியோஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இந்நிலையில், இந்த படத்தின் டீசரை வருகிற மார்ச் 8-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.