சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபாஸ். 2002-ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான படம் ‘ஈஸ்வர்’. இது தான் பிரபாஸ் ஹீரோவாக அறிமுகமான முதல் படமாம். இந்த படத்தை இயக்குநர் ஜெயந்த்.சி.பரஞ்சீ இயக்கியிருந்தார். இதன் பிறகு ‘ராகவேந்திரா, வர்ஷம்’ என இரண்டு படங்கள் வெளியானது.
இதில் ‘வர்ஷம்’ மிகப் பெரிய ஹிட்டானதால் பிரபாஸிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அடவி ராமுடு, சக்ரம், சத்ரபதி, பௌர்ணமி, யோகி, முன்னா, புஜ்ஜிகாடு, பில்லா, ஏக் நிரஞ்சன், டார்லிங், மிஸ்டர் பெர்ஃபெக்ட், ரிபெல், மிர்ச்சி, பாகுபலி 1 & 2, சாஹோ’ என படங்கள் குவிந்தது.
இதில் ‘பாகுபலி 1 & 2’ வெளியான அனைத்து மொழிகளிலும் ஹிட்டாகி பிரபாஸின் கேரியரில் மிகப் பெரிய ஹைலைட்டாக அமைந்தது. இதனை டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ராணா டகுபதி, சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். உலக அளவில் ‘பாகுபலி 1’ ரூ.650 கோடியும், ‘பாகுபலி 2’ ரூ.1788.06 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்ததாம்.