சைன்ஸ்-ஃபிக்ஷன் படத்தில் பிரபாஸுடன் டூயட் ஆடப்போகும் முன்னணி பாலிவுட் ஹீரோயின்!

  • July 20, 2020 / 08:22 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் இப்போது நடித்து வரும் படம் ‘ராதே ஷ்யாம்’. இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கவுள்ளார்.

இந்த படம் நடிகர் பிரபாஸின் கேரியரில் 21-வது படமாம். இதனை ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகவிருக்கிறது. இதன் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2021) துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது, இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘வைஜெயந்தி மூவீஸ்’ தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. நடிகர் பிரபாஸ், நடிகை தீபிகா படுகோன் டூயட் பாடி ஆடப்போகும் முதல் படம் இதுதானாம். இப்படம் சைன்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் தயாராகப்போவது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus