லாக் டவுன் டைமில் காதலியை கரம் பிடித்த பிரபாஸ் பட இயக்குநர்!

  • August 3, 2020 / 09:22 PM IST

‘பாகுபலி’ பார்ட் 1 & 2 படங்களின் வெற்றியால் நடிகர் பிரபாஸுக்கு தெலுங்கு மட்டுமில்லாமல், தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் மிகப் பெரிய மாஸ் ஓப்பனிங்க்கான அனைத்து விஷயங்களும் கைகூடி வந்தது. அதன் பிறகு மெகா பட்ஜெட்டில் உருவான படம் ‘சாஹோ’. இந்த படத்தை பிரபல இயக்குநர் சுஜீத் இயக்கியிருந்தார்.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இப்படம் கடந்த ஆண்டு ரிலீஸானது. ஆனால், எக்ஸ்பெக்டேஷன் ஓவராக இருந்ததால், இப்படம் அனைவரையும் திருப்தி படுத்தவில்லை. பிரபாஸின் ரசிகர்களுக்கு மட்டுமே சில சண்டைக் காட்சிகள் விருந்தாக அமைந்தது. இப்படத்தின் இயக்குநர் சுஜீத், ஏற்கனவே தெலுங்கில் ‘ரன் ராஜா ரன்’ என்ற படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இவர் மலையாளத்தில் ஹிட்டான ‘லூசிஃபர்’ படத்தை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து இயக்க ப்ளான் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் இயக்குநர் சுஜீத் தனது நீண்ட நாள் காதலி பிரவள்ளிகாவை திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. பிரவள்ளிகா ஒரு தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமணத்துக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ‘சாஹோ’ படத்தின் பின்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus