பிரபாஸ் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’… சூப்பரான அப்டேட் கொடுத்த இயக்குநர்!

  • July 29, 2021 / 11:36 AM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஹிந்தி வெர்ஷனுக்கு மிதூன் – மனன் பரத்வாஜ்ஜும், தமிழ் – தெலுங்கு – கன்னடம் – மலையாளம் வெர்ஷன்களுக்கு ஜஸ்டின் பிரபாகரனும் இசையமைத்து வருகிறார்கள். சமீபத்தில், பிரபாஸின் பர்த்டே ட்ரீட்டாக படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். பிரபாஸின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இதன் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. தற்போது, ஷூட்டிங் முழுவதும் முடிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் பொங்கல் (சங்கராந்தி) ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus