பிரபாஸின் ராதேஷ்யாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளம்!

  • November 20, 2020 / 04:20 PM IST

பிரபாஸ் நடிப்பில் 4 மொழிகளில் வெளியாகவிருக்கும் அடுத்த திரைப்படம் பிரபாஸ் 20 என்றழைக்கப்பட்ட “ராதே ஷ்யாம்”. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தை இயக்குனர் கே.கே.ராதாகிருஷ்ணா குமார் இயக்கியுள்ளார். யூவி கிரேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.

இந்த படம் ஒரு காதல் கதையை மையமாக கொண்ட படம் என்றும், பிரபாஸ் மற்றும் பூஜா ஹெட்ஜ் உடனான காதல் யூரோப்பில் நடக்கும்படி அமைந்துள்ளதாகவும், பிரபாஸ் அதிர்ஷ்டம் சொல்லும் நபர் கதாபாத்திரத்திலும், பூஜா ஹெட்ஜ் இளவரசி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இத்தாலி சென்றிருந்த படக்குழு, இந்த படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகவும் மீதமுள்ள படப்பிடிப்பை தொடங்குவதற்காக ஹைதராபாத் வந்துள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வந்தது.

இதை தொடர்ந்து தற்போது இந்த படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து ஒரு ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. மும்மரமாக இந்த படப்பிடிப்பு வேலைகளில் திரைப்படக் குழு இறங்கியுள்ளது தெரிகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus