Salaar Cease Fire : அதிக லைக்ஸ் குவிக்கும் பிரபாஸின் ‘சலார்’ படத்தின் ‘ஆகாச சூரியன்’ பாடல்!

  • December 13, 2023 / 08:08 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘கல்கி 2898 AD’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சலார்’ படத்தை ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி வருகிறார்.

இப்படம் இரண்டு பாகங்களாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது. ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோ பிரபாஸுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.

பிரபாஸுக்கு எதிராக மோதும் வில்லன் ரோலில் ப்ரித்விராஜ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இப்படத்தின் முதல் பாகத்தை வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘ஆகாச சூரியன்’-ஐ ரிலீஸ் செய்துள்ளனர்.

Suriyan Kudaiya Neetti(Tamil) Salaar |Prabhas |Prithviraj |Prashanth Neel|Ravi Basrur |Hombale Films

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus