பிரபாஸின் ‘சலார்’ல் வில்லனாக நடிக்கும் ப்ரித்விராஜ்… வெளியானது அவரின் கேரக்டர் போஸ்டர்!
October 16, 2023 / 06:46 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘கல்கி 2898 AD’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சலார்’ படத்தை ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி வருகிறார்.
இப்படம் இரண்டு பாகங்களாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது. ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோ பிரபாஸுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
பிரபாஸுக்கு எதிராக மோதும் வில்லன் ரோலில் ப்ரித்விராஜ் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
இப்படத்தின் முதல் பாகத்தை வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நடிகர் ப்ரித்விராஜின் பர்த்டே ஸ்பெஷலாக அவரின் கேரக்டர் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.