பிரபாஸ் – ப்ரித்விராஜ் இணைந்து நடிக்கும் ‘சலார்’… புதிய ரிலீஸ் தேதி?

  • September 4, 2023 / 08:38 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘கல்கி 2898 AD’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சலார்’ படத்தை ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி வருகிறார்.

இப்படம் இரண்டு பாகங்களாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது. ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோ பிரபாஸுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

பிரபாஸுக்கு எதிராக மோதும் வில்லன் ரோலில் ப்ரித்விராஜ் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

முதல் பாகத்தை வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டிருந்தனர். தற்போது, இதன் ரிலீஸை அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 12-ஆம் தேதிக்கு (சங்கராந்தி) தள்ளி வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus