பிரபாஸுடன் கூட்டணி அமைக்கப்போகும் சூர்யா பட இயக்குநர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • May 8, 2021 / 09:23 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் பிரபாஸ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தை பாப்புலர் பெண் இயக்குநர்களில் ஒருவரான சுதா கொங்கரா இயக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே ‘இறுதிச்சுற்று, சூரரைப் போற்று’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், பிரபாஸை சந்தித்து சுதா கொங்கரா சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம்.

ஆகையால், பிரபாஸ் உடனே கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். தற்போது, இந்த படத்துக்கான அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பித்திருக்கிறாராம் சுதா கொங்கரா. இந்த படத்தை முடித்து விட்டு, அடுத்ததாக டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ப்ளான் போட்டுள்ளாராம் சுதா கொங்கரா.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus