5 மொழிகளில் உருவாகும் பிரபாஸின் ரொமான்டிக் படம்… ஒப்பந்தமான 3 இசையமைப்பாளர்கள்!

  • February 12, 2021 / 11:23 AM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

சமீபத்தில், பிரபாஸின் பர்த்டே ட்ரீட்டாக படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். பிரபாஸின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தற்போது, இந்த படத்தின் ஹிந்தி வெர்ஷனுக்கு மிதூன் – மனன் பரத்வாஜ்ஜும், தமிழ் – தெலுங்கு – கன்னடம் – மலையாளம் வெர்ஷன்களுக்கு ஜஸ்டின் பிரபாகரனும் இசையமைத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே ட்விட்டரில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus