முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ கடந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
‘விடாமுயற்சி’-க்கு பிறகு அஜித்தின் 63-வது படத்தை ‘மார்க் ஆண்டனி’ பட புகழ் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிக்கிறது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், அஜித் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2000-ல் ரிலீஸான தமிழ் படம் ‘பெண்ணின் மனதை தொட்டு’. இதனை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எழில் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக பிரபு தேவா நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென்று இயக்குநர் எழில் அஜித்தையும் அணுகியிருந்தாராம். பின், சில காரணங்களால் அஜித்தால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.