அடேங்கப்பா… பிரபு தேவாவின் ‘பஹீரா’ படத்தின் முதல் நாள் வசூல் இவ்ளோவா?

  • March 4, 2023 / 05:53 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் பிரபு தேவா. இவர் நடித்துள்ள புதிய மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானர் படமான ‘பஹீரா’ நேற்று (மார்ச் 3-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி ஷங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் என ஏழு ஹீரோயின்ஸாம்.

மேலும், முக்கிய ரோல்களில் சாய் குமார், நாசர், பிரகதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘பரதன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆர்.வி.பரதன் தயாரித்துள்ளார்.

இதற்கு கணேசன்.எஸ் இசையமைத்துள்ளார், அபிநந்தன் இராமானுஜம் – செல்வகுமார்.எஸ்.கே ஒளிப்பதிவு செய்துள்ளனர், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படம் நேற்று மட்டும் உலக அளவில் ரூ.1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus