மெகா ஹிட்டான பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’… வெளியானது மேக்கிங் வீடியோ!

  • February 22, 2023 / 08:39 AM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கோமாளி’. இதில் ஹீரோவாக ‘ஜெயம்’ ரவி நடித்திருந்தார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, ஹீரோவாக நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் கடந்த ஆண்டு (2022) நவம்பர் 4-ஆம் தேதி தமிழிலும், நவம்பர் 25-ஆம் தேதி தெலுங்கிலும் ரிலீஸானது. இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா ரவி, ஆதித்யா கதிர், ஆஜீத், விஜய் வரதராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. தற்போது, இதன் மேக்கிங் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus