தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கோமாளி’. இதில் ஹீரோவாக ‘ஜெயம்’ ரவி நடித்திருந்தார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படமான ‘லவ் டுடே’ கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா ரவி, ஆதித்யா கதிர், ஆஜீத், விஜய் வரதராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 21 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.59.16 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.