‘லவ் டுடே’வில் இடம்பெற்ற ‘இலந்தைப்பழம்’ பாடலின் ரீல்ஸ் காட்சி… வெளியானது அதன் மேக்கிங் வீடியோ!

  • November 25, 2022 / 11:37 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கோமாளி’. இதில் ஹீரோவாக ‘ஜெயம்’ ரவி நடித்திருந்தார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படமான ‘லவ் டுடே’ கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா ரவி, ஆதித்யா கதிர், ஆஜீத், விஜய் வரதராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற ‘இலந்தைப்பழம்’ பாடல் ரீல்ஸ் காட்சியின் மேக்கிங் வீடியோவை பிரதீப் ரங்கநாதன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus