பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் யாருடன் தெரியுமா ?

  • January 5, 2023 / 09:43 AM IST

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் . இவர் இயக்கிய கோமாளி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . ஜெயம் ரவி , காஜல் அகர்வால் , உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார் .

கோமாளி படத்திற்கு பிறகு இவர் இயக்கி உள்ள படம் லவ் டுடே . இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனே நாயகனாக நடித்து இருக்கிறார் . மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது . சத்யராஜ் , ராதிகா உள்ளிட்டோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் .இளைஞர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது .

இந்நிலையில் லவ் டுடே படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது . இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட்டுள்ளார் . இந்த படம் நவம்பர் 25-ஆம் தேதி தெலுங்கு பேசும் மாநிலங்களில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த யாருடன் இணைந்து படம் இயக்க உள்ளார் என்று கேள்வி ரசிகர்களுக்கு இருந்தது . தற்போது இந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது . ஏ.ஜி .எஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி நாயகனாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus