தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் பெரும் பிரபலமான நடிகர் பிரகாஷ் ராஜ். அரசியல் ஆர்வம் கொண்ட பிரகாஷ் ராஜ் அவ்வப்போது அரசியல் ரீதியிலான கருத்துக்களையும் கூறிவருகிறார். நடிகர் பிரகாஷ் ராஜ்க்கும் பாஜக அரசுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. கிடைக்கும் கேப்பில் எல்லாம் பாஜக அரசை சாடி வருகிறார்.பத்திரிக்கையாளர் கொலை, பட்டேல் சிலை, மாட்டுக்கறி விவகாரம், பசுவதை தடுப்புச்சட்டம், சிஏஏ சட்டத்திருட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட பாஜகவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டார் பிரகாஷ் ராஜ். இந்நிலையில் இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றியது கடுமையாக விமர்சித்துள்ளார் பிரகாஷ் ராஜ். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இன்று இரவு 8 மணி.. ஒரு வெற்று பாத்திரம் சும்மா அதிக சத்தம் போட்டது.. என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் உரையில் ஒன்றும் இல்லை என்பதை விமர்சிக்கும் வகையில் இந்த பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.
at 8PM today …an EMPTY VESSEL just made a lot of NOISE … #JustAsking
— Prakash Raj (@prakashraaj) May 12, 2020
பிரகாஷ் ராஜின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக சாடியிருக்கின்றனர். அவரது பாணியிலேயே இரவு 8.42 மணிக்கு நாய் குறைக்க தொடங்கி விட்டது என அவர் டிவிட்டிய நேரத்தை வைத்து அவரை விளாசி தள்ளியிருக்கின்றனர்.மேலும் சில நெட்டிசன்கள் நீங்கள் அடிக்கடி டிவிட்டரில் செய்வதை போல என்று அவரது ஸ்டைலிலேயே விளாசியுள்ளனர். மற்றொரு நெட்டிசனான இவர், ஒன்றும் இல்லாத மண்டையால் ஒரு வார்த்தையை கூட புரிந்து கொள்ள முடியாது.. டிவிட்டரில் சத்தம்தான் போடும் என்று வச்சு செய்துள்ளார்.