சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கஜினி’. 2005-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இதனை இயக்கியிருந்தார். இதில் சூர்யா ‘சஞ்சய் ராமசாமி’யாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார்.
இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இதில் வில்லனாக பிரதீப் ராவத் மிரட்டியிருந்தார். ஆனால், அந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் முதல் சாய்ஸாக இருந்தது பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தானாம். பின், சில காரணங்களால் பிரகாஷ்ராஜால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.