மகளின் 2-வது பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் வீடியோஸ்!

  • January 25, 2022 / 04:21 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசன்னா. இவர் அறிமுகமான முதல் படமே முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னமின் தயாரிப்பில் அமைந்தது. அந்த படம் தான் ‘ஃபைவ் ஸ்டார்’. இந்த படத்தை இயக்குநர் சுசி கணேசன் இயக்கியிருந்தார். அதன் பிறகு 2004-ஆம் ஆண்டு வெளியான ‘அழகிய தீயே’ என்ற படம் சூப்பர் ஹிட்டாகி, பிரசன்னாவின் நடிப்புக்கும் லைக்ஸ் போட வைத்தது.

‘அழகிய தீயே’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு பிரசன்னாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘கண்ட நாள் முதல், சாது மிரண்டா, அஞ்சாதே, அச்சமுண்டு அச்சமுண்டு, நாணயம், பாணா காத்தாடி, முரண், சென்னையில் ஒரு நாள், கல்யாண சமையல் சாதம், ப.பாண்டி, நிபுணன், துப்பறிவாளன், திருட்டுப் பயலே 2, மாஃபியா : அத்தியாயம் ஒன்று, நாங்க ரொம்ப பிஸி’ என படங்கள் குவிந்தது.

2012-ஆம் ஆண்டு பிரபல நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரசன்னா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தற்போது, மகள் ‘ஆத்யந்தா’வின் இரண்டாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸை நடிகை சினேகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus